புதுடெல்லி: 'தேசம் முதலில்' என்பதே நாட்டின் வளர்ச்சிக்கான எங்கள் மாடல். எங்களின் இந்த வளர்ச்சி மாடலை மக்கள் சோதித்துப் பார்த்து, புரிந்து கொண்டு, ஆதரிக்கத் தொடங்கினார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர், "குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மேலும், நம் அனைவருக்கும் முன்னோக்கிச் செல்லும் பாதையைக் காட்டியது. அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி (சப்கா சாத் சப்கா விகாஸ்) என்பதை காங்கிரஸால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் திட்டத்துக்கும் பொருந்தாது. ஏனெனில், அது ஒரு குடும்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி.