சென்னை : 2025 ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு மாணவர்களின் வருகை பதிவு சரிந்துள்ளது. மாணாக்கருக்கு நீட் தேர்வு மீதான ஆர்வம் குறைந்ததற்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்கப்படும் உச்சபட்ச கெடுபிடிகளே காரணமாக கூறப்படுகிறது. முறைகேடுகளை தடுப்பதாக கூறி தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை மைய அதிகாரிகளின் உச்சபட்ச கெடுபிடிகளால் நீட் தேர்வுக்கு பெயரை பதிவு செய்தும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இம்முறை அதிகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற நீட் தேர்வுக்காக 22 லட்சத்து 80 ஆயிரம் மாணவ மாணவியர்கல் ஆர்வத்துடன் பெயர்களை பதிவு செய்திருந்தனர். ஆனால் 91.4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றார்கள். அதாவது 20.8 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவில்லை 2024ல் நீட் தேர்வுக்கு 24லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் அதிகபட்சமாக 97.7சதவீத தேர்வர்கள் தேர்வினை எழுதி இருந்தனர். அதற்கு முன்பு 2023ல் 20.9 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில் நீட் தேர்வுக்கான வருகை பதிவு 97.6 சதவீதமாக இருந்தது.
2022ல் பதிவு செய்யப்பட்ட 18 .7 லட்சம் மாணாக்கர்களின் 94.2 சதவீதம் பேர் நீட் தேர்வு எழுதினர். 2021 ஆம் ஆண்டு 16.10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். அதில் 95.56 சதவீதம் பேர் தீட்ட தேர்வை எழுதி இருந்தனர். நீட் வரலாற்றில் முதன் முறையாக 2025ல் தேர்வு நாளில் மாணவ, மாணவியரின் வருகை பதிவு 9 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. மாநகரின் வருகை பதிவு குறைந்ததற்கு போலி தேர்வர்களை நீக்குவதற்காக தேசிய தேர்வு முகமை மேற்கொண்டு வரும் கடுமையான சோதனைகளே காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
The post தேசிய தேர்வு முகமையின் கடும் சோதனைகள் எதிரொலி: நீட் வரலாற்றில் முதன் முறையாக மாணவர் வருகைப் பதிவு வீழ்ச்சி appeared first on Dinakaran.