சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். ஒற்றைத் தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஓரணியில் திரண்டுள்ளோம்.” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டே இடம்பெற்றுள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.