தேனி: தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அல்லிநகரம், ரத்தினம் நகர், வடபுதுப்பட்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. நத்தம், வேலம்பட்டி, கோவில்பட்டி, சாணார்பட்டியில் காலை முதல் விட்டுவிட்டு மழை வந்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்தது.
The post தேனி மற்றும் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை..!! appeared first on Dinakaran.