இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜனா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஷ்க் மே’ என்ற படம் உருவாகிறது. இதில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து தனுஷின் புதிய தோற்றம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதில் விமானப்படை உடையை நடிகர் தனுஷ் அணிந்திருந்தார். இதனால் அவர் விமானப்படை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படம் நவ. 28-ல் வெளியாக இருக்கிறது.