சென்னை: “இனிவரும் காலங்களில் பா‌ஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், அறிவித்த வாக்குப்பதிவு சதவீதத்துக்கும், அடுத்த நாள் தேரதல் ஆணையம் அறிவித்த சதவீதத்துக்கும் 7 சதவீதம் வித்தியாசம் உள்ளது. வாக்கு எண்ணும்போது மேலும் 1.2 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக காட்டுகிறார்கள்.