இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேட் கலெக்‌ஷனை முன்னிறுத்தி செய்யப்பட்ட ஏற்பாடு என்று தெரிகிறது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள், பாகிஸ்தானுடன் ஆட மாட்டோம் என்று புறக்கணித்தனர். அதேபோல் ஆசியக் கோப்பையையும் புறக்கணிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும், அப்படி எதுவும் நடக்காது என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதை அடுத்து பிசிசிஐ ஒப்புக் கொண்டது.