சென்னை: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
"நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026-ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.