நாடாளுமன்ற கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக குற்றம்சாட்டியதால் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, நீதிபதி வீட்டில் பணம் சிக்கியது ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கர்நாடகாவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக – காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.