சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டும், 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். எஞ்சிய தொகுப்பூதிய செவிலியர்கள் தங்களையும் பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணிபுரியும் தங்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.