சென்னை: அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து, முளைவிட்டு சேதமடைந்து விட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் மேற்கு பருவமழை நிறைவுக்கு முன்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. வழக்கத்துக்கும் கூடுதலான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.