மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுளாக நீடித்து வருகின்றது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய தொழிலாளர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இதன்படி அதிக தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகளில் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் பத்து லட்சம் இந்திய தொழிலாளர்களை ரஷ்யா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் உட்பட இந்தியாவில் இருந்து 10லட்சம் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் வருவார்கள். இந்த விவகாரத்தை கையாளுவதற்கான யெகாடெரின்பர்க்கில் புதிய துணை தூதரகம் திறக்கப்படுகின்றது
இதேபோல் இலங்கை மற்றும் வடகொரியாவில் இருந்து தொழிலாளர்களை அழைப்பது குறித்தும் ரஷ்யா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா தொழிலாளர் அமைச்சகமானது 2030ம் ஆண்டுக்குள் 31லட்சம் தொழிலாளர்களை பற்றாக்குறையை எதிர்க்கொள்ள கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை அழைப்பதற்கான ஒதுக்கீட்டை 1.5மடங்கு அதிகரித்து 2.3லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post தொழிலாளர்கள் பற்றாக்குறை எதிரொலி 10 லட்சம் இந்திய ஊழியர்களை பணியமர்த்த ரஷ்யா முடிவு appeared first on Dinakaran.