கொல்கத்தா: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை பாஜக சேர்ப்பதாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக, தேர்தல் பயத்தால் அவர் உளறுவதாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுகந்த மஜும்தார், "மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தான் தோற்கப்போவதை மம்தா பானர்ஜி உணர்ந்துள்ளார். அதனால்தான் அவரது மனநிலை சீராக இல்லை. அவர் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்.