நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி காயம் அடைந்துள்ளதால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த புதன்கிழமை லாகூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் போது எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்த போது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் வலி இன்னும் குறையவில்லை.