செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 2025-2026ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
இவற்றை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-2026ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி மூலம் செலுத்த வேண்டும்.
அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து, விண்ணப்பக்கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக்கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.28.2.2025. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்: 044-2250 1006, 2250 1113 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
The post நடப்பு கல்வியாண்டுக்கான தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.