துபாயில் நடந்த 24 ஹெச் கார் ரேஸில், 991 பிரிவில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்' அணி 3-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், "அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதனை செய்துள்ளீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “முதன் முதலாகக் கலந்துகொண்ட போட்டியிலேயே சாதனை படைத்துள்ள என் நண்பர் அஜித்தை நினைத்து மகிழ்கிறேன். அவர் தனது ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்கிறார். இந்திய மோட்டார் விளையாட்டுக்கு இது பெருமை” என்று தெரிவித்துள்ளார்.