நெல்லை: பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமண வாழ்க்கை குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து அவரது டாக்டர் டேனியல்ராஜ் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், யூடியூப் மற்றும் பிற சமூக வலைதள நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்தத் தவறான வீடியோக்களை நீக்க கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அந்த சமூக வலைதளங்களில், அதன் பயனர்கள் தானாக முன்வந்து தனுஷ் சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘வதந்தி வீடியோக்களை முற்றிலும் நீக்குவது என்பது நீண்ட செயல்முறை. அது நடந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம்.’ என்றனர்.
The post நடிகர் நெப்போலியன் மகன் பற்றி வதந்தி வீடியோக்கள் நீக்கம் appeared first on Dinakaran.