மோகன்லால், மஞ்சுவாரியர், டோமினோ தாமஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாளப்படம், ‘எம்புரான்’. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு மார்ச் 27-ல் வெளியானது. இந்தப் படத்தில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றன. வில்லன் பெயரை ‘பாபா பஜ்ரங்கி' என வைத்தனர். சில இடங்களில் வரும் வசனங்களும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து படத்தில் உள்ள 3 நிமிட சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் நடிகர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர், எம்புரான் உட்பட 3 திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்தார். அதில் ஈட்டிய வருவாய் தொடர்பான கணக்கு விவரங்களைக் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.