மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம், ‘எம்புரான்’. மார்ச் 27-ல் இந்தப் படம் வெளியானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றன. வில்லன் பெயரை 'பாபா பஜ்ரங்கி' என வைத்தனர். சில இடங்களில் வரும் வசனங்களும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்தப் படத்தின் 3 நிமிட சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் வீட்டில் சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து ‘எம்புரான்’ படத்தின் இயக்குநர். நடிகர் பிருத்வி ராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.