சென்னை: நடிகர் விஷால் குறித்து அவதூறாக தகவல் பரப்பிய புகாரில் 3 யூடியூப் சேனல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு ‘மதகஜராஜா’ பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின. பேசவும் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் விசாரித்தனர். இதையடுத்து விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விஷால் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர் வதந்திகள் பரவியது. உடல்நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தொடங்கினர்.இந்த நிலையில், நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவதூறாக தகவல் பரப்பிய புகாரில் 3 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் அளித்த புகாரில் 3 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
The post நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு: யூடியூபர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு appeared first on Dinakaran.