சென்னை: பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது எக்ஸ் தள பக்கத்தில் அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளையும் குஷ்பு வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டுள்ள குஷ்பு, ”என்னுடைய எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
என்னால் கணக்கில் உள்நுழைய(login) முடியவில்லை. கடந்த 9 மணி நேரத்தில் எக்ஸ் பக்கத்தில் நான் எந்த பதிவும் பதிவிடவில்லை. இதைச் சரிசெய்ய முயற்சித்து வருகிறேன். எனது எக்ஸ் பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் வந்தால் தெரிவிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பும் ஓரிரு முறை குஷ்புவின் எக்ஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தொழில்நுட்ப பிரிவிடம் புகார் அளித்திருக்கிறார்.
The post நடிகை குஷ்புவின் எக்ஸ் தளம் முடக்கம் appeared first on Dinakaran.