வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய விண்கலம் நடுவானில் வெடித்து சிதறியது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிக பெரிய விண்வெளி திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில், புதிய மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து,
நேற்று (ஜனவரி .16) விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் பறக்கத் தொடங்கிய 8வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்து சிறிது நேரத்தில் விண்கலம் வெடித்து சிதறியது. விண்கலனின் பாகங்கள் தீ பிடித்தபடியே கீழே விழும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனுப்பப்பட்ட விண்கலனும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
The post நடுவானில் வெடித்துச்சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன்: புறப்பட்ட 8ஆவது நிமிடத்தில் வெடித்தது appeared first on Dinakaran.