
புதுடெல்லி: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா – இலங்கை இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பிராந்தியத்தின் நலனுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என தெரிவித்துள்ளார்.

