புதுடெல்லி: தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமி, கலைத் துறையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.