சோ.விஜயகுமார், கவிஞர். கவிதை இயல் குறித்துத் தொடர்ந்து பேசி வருபவர். ‘ஒரு ஸ்க்ரோல் தூரம்’, ‘சிற்றெறும்பின் நிழல்’, ‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ ஆகிய மூன்று தொகுப்புகள் உயிர்மை வெளியீடாக வந்துள்ளன. நவீன கவிதை குறித்து அவருடன் உரையாடியதன் ஒரு பகுதி இது.
ஏன் கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்? – மொழியின் உச்ச நிலை கவிதை தான். நாவலில் பிரமாதமான இடங்களை நாம் கவித்துவம்தான் என்றுதானே சொல்கிறோம்? சிறுகதைகளிலும் ‘மொழிநடையில் கவித்துவம் இருக்கிறது’ என்கிறோம். கதை, யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு மொழிதான் முக்கியம். அந்த மொழி எப்படிச் சிறப்பாகிறது என்றால் அதன் கவித்துவத்தால்தான். அதனால் கவிதைதான் முக்கியம்; முதன்மையானதும் கூட.