திருச்சி: நாகையில் இன்று (3ம்தேதி) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் நாகை சென்றடைந்தார். நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகையில் இன்று (3ம்தேதி) நடக்கிறது.
இந்த விழாக்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கோவி.செழியன், பெரம்பலூர் எம்பி அருண் நேரு, தஞ்சாவூர் எம்பி முரசொலி, தாட்கோ தலைவர் மதிவாணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், கலெக்டர் பிரதிப் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்வர் திருச்சியில் இருந்து காரில் நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்றடைந்த முதல்வர், அரசு சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
The post நாகை சென்றார் முதல்வர்: இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.