நாக் அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆலியா பட் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு 2026-ம் ஆண்டில் தான் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின். இப்படத்தில் நடிப்பதற்காக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அது முழுமையாக நாயகியை மையப்படுத்திய கதையாகும். தற்போது அக்கதையில் ஆலியா பட் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்.