டெல்லி: நாடு முழுவதும் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் முறை பரிவர்த்தனை அதிகமாக நடைபெற்று வருகிறது. முதலில் வங்கிகள் அல்லது ஏடிஎம்களில் சென்று காத்திருக்கும் பணம் எடுக்க வேண்டும் என்ற நிலை மாறி யுபிஐ சேவை மூலம் போன் மூலமாகவே எளிதில் பணம் செலுத்தும் நிலை வந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் கூகுள் பே, போன் பே, பே டிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
மேலும், பெட்டிக் கடை முதல் பெரிய கடைகள் வரை அனைத்திலும் க்யூ ஆர் கோடு இருப்பதால், மக்கள் பணத்தை கையில் கொண்டு செல்ல வேண்டிய தேவையே ஏற்படாது. ஆனால், சில சமயங்களில் யுபிஐ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயனர்கள் சிரமத்தை சந்திப்பதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யு.பி.ஐ. சேவை பாதிப்பால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டு வருவதாக என்.பி.சி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
The post நாடு முழுவதும் யு.பி.ஐ.பணப் பரிவர்த்தனை சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி..!! appeared first on Dinakaran.