புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேநே்திர மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100%-ஐ எட்டி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.