புதுடெல்லி: இந்தியா மீது வியாழக்கிழமை அன்று இரவு பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. அதை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மார், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. மே 10-ம் தேதி வரை இந்த விமான நிலையில் மூடப்பட்டு இருக்கும் என தகவல்.