சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் கூறும்போது, “ஆர்சிபிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அந்த அணிக்கு ரஜத் பட்டிதார் புதிய கேப்டனாக உள்ளார்.
அவர்கள், ரஜத்தை கேப்டனாக அறிவித்த உடனேயே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்தினேன். நாங்கள் இப்போது சிறிது காலமாக நண்பர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிவோம்.