போலிச் செய்திகளின் சதி வலைப்பின்னலின் சர்ச்சையின் மையக் கதாபாத்திரமாகி, பிறகு அந்தச் செய்திகளைக் கடுமையாகக் கண்டித்து மீண்டு வந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் ரிக்கி பான்டிங்.
என்ன நடந்தது? – இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்தவுடன் பரஸ்பர கைகுலுக்கல் சடங்கைப் புறக்கணித்தது முரண்பட்ட எதிர்வினைகளை இரு நாட்டு ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பற்றிய போலிச் செய்தி ஒன்று ரிக்கி பான்டிங் கூறியதாக எக்ஸ் வலைத்தளத்தில் பரவியது. இதனையடுத்து பான்டிங் நெட்டிசன்களின் வசை வலையில் சிக்கினார்.