அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மதுரோவும் அவரது மனைவியும் நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சட்டைகள், காக்கி நிற பேன்ட் என சிறைச்சாலை உடை அணிந்திருந்தனர். விசாரணை நேரத்தில் ஸ்பானிய மொழிபெயர்ப்பைக் கேட்பதற்காக அவர்கள் ஹெட்ஃபோன் அணிந்திருந்தனர். மதுரோ ஒரு மஞ்சள் நிற சட்டப் புத்தகத்தில் நுணுக்கமாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு அதைத் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமா என்று நீதிபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

