சென்னை: என்னுடைய வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த துறையில் என்னை போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சில குழுக்கள் அதில் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த துறைக்கு வருவதற்கு அவர் யார் என்று கேட்டனர். இன்னும் சிலர் என் முகத்துக்கு நேராகவே ‘இந்த துறையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்’ என்று கேட்டனர். அவர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்வதில்லை. சிரித்துக் கொண்டே கடந்துவிடுகிறேன்.