தருமபுரி: நான் சொல்வதை கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்செல்வன் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நேற்று முன்தினம் தருமபுரியில் கட்சி செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் தர்மச்செல்வன் பேசியதாக வெளியான ஆடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “நான் சொல்வதை கலெக்டர், எஸ்.பி. கேட்க வேண்டும். அனைத்து நிர்வாகங்களும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. எவனும் கேம் ஆட முடியாது. ஆடினால் அவன் கதை முடிந்தது. ‘நீ சொல்றதை கேட்கலைனா, அதிகாரிகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் உன் லெட்டர் பேடில் எனக்கு லெட்டர் கொடு’ என்று தலைவர் கூறியுள்ளார்.