நான் முதல்வன் திட்டத்தை குறை கூறியதுடன் பட்டியலின மக்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசிய நிம்மியம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.