டெஸ்ட் கிரிக்கெட் உலகில் முதன்முதலாக 10,000 ரன்களை எட்டிய லெஜண்ட் சுனில் கவாஸ்கர். அவர் தான் இந்த 10 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இம்ரான் கான்தான் என்று கூறியுள்ளார்.
1987-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார் சுனில். அவருக்குப் பிறகு இன்று 14 வீரர்கள் இந்த மைல்கல்லைக் கடந்து சென்று விட்டனர். ஆனாலும் சுனில் கவாஸ்கர் முதன்முதலில் இதற்குப் பாதை வகுத்துக் கொடுத்த உத்வேகி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.