திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.