பிரபல சாமியார் நித்தியானந்தா மரணமடைந்துவிட்டதாக பரவும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலத்தில் ஆசிரமம் அமைத்தார். பின்னர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவிய நித்தியானந்தா, நடிகையுடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். மேலும் பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து நித்தியானந்தா தலைமறைவாகினார்.
கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்தியானந்தா, அங்கு தொழில் தொடங்க வருமாறும் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். நித்தியானந்தா கடந்த 5 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருக்கிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகின. இந்த நிலையில் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல் பரவியது. நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்தியானந்தா மரணமடைந்துவிட்டார் என்ற தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இத போல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. நித்தியானந்தாவின் சகோதரி மகன் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் வழக்குகளில் இருந்து தப்பிக்க நித்தியானந்தாவின் மரண செய்தி பரப்பப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அவரின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என்று பக்தர்கள் குழப்படமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post நித்தியானந்தா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக வெளியான வீடியோவால் சர்ச்சை appeared first on Dinakaran.