திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டி பேஷன் கல்லூரியில் கார்-பைக் ஷோ நேற்று நடந்தது. 30 கார்கள், 20 இருசக்கர வாகனங்கள் மூலம் வாகன சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவையை சேர்ந்த பிரபல கிளப்களில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் இந்த ஸ்டண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வகை சாகச வாகனங்களில் பல வித மாற்றங்கள் செய்து வித்தியாசமான சப்தம் மற்றும் அதிக ஆர்பிஎம் மற்றும் சிறந்த கட்டுப்பாடு என மாணவர்களை மெய்சிலிர்க்கும் வகையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாருதி 800 முதல் மினி கூப்பர், பிஎம்டபுள்யு கார்களும் அதிக ஆர்பிஎம் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை கொண்டு பெண்கள், ஆண்கள் என வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
The post நிப்ட்-டி கல்லூரியில் கார்-பைக் ஷோ சாகச நிகழ்ச்சி appeared first on Dinakaran.