வாஷிங்டன்: நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட தைவான் நடிகை பார்பி ஹ்சு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2001ம் ஆண்டு ரிலீசாகி வெற்றி பெற்ற ‘மீட்டியோர் கார்டன்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த தைவானிய நடிகை பார்பி ஹ்சு (48), நிமோனியா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரது சகோதரி டீ ஹ்சு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது சகோதரி பார்பி ஹ்சு சமீபத்தில் ஜப்பானுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
அப்போது அவருக்கு திடீரென நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி பார்பி ஹ்சு காலமானார்’ என்று கூறியுள்ளார். சகோதரிகள் பார்பி – டீ ஹ்சு ஆகிய இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன் பாப் பாடகர்களாக இருந்தனர். ஏற்கனவே வலிப்பு மற்றும் இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த பார்பி ஹ்சு, கடந்த காலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் திடீரென இறந்தது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரிய பாடகர் டி.ஜே.கூவை, பார்பி ஹ்சு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்க இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
The post நிமோனியா பாதிப்பால் தைவான் நடிகை மரணம் appeared first on Dinakaran.