மகாராஷ்டிராவில் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ரூ.168 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் (இஓடபிள்யூ) விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ரூ.167.85 கோடி மதிப்பிலான 21 சொத்துகளை பறிமுதல் செய்யவதற்கான அனுமதியை போலீஸாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல் முறையாக மும்பையில் அந்த சட்டத்தின் கீழ் பறிமுதல் நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.