புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரும் மனு தொடர்பான விசாரணையின் போது, “ நிர்வாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம்" என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தையும், அதன் நீதிபதிகளையும் பாஜகவை சேர்ந்த சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர்.கவாயின் இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.