ரியோ டி ஜெனிரோ: நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதியாக உள்ளது என நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "புதுடெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி திறன் விகிதத்தை இரட்டிப்பாக்கவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம். பிரேசிலின் தலைமையின் கீழ், இந்த இலக்குகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.