சென்னை: தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக பாமக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே புஞ்சை இடையார் மேல்முகம் கிராமத்தில் மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலத்தை போலி சங்கப்பதிவு மூலமாக அபகரித்ததாக கபிலர்மலை தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ-வான பாண்டமங்கலம் பி.நெடுஞ்செழியன், வழக்கறிஞர் ஏ.பி.காமராஜர், பரமத்தி வேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவரான பொன்னிமணி என்ற சுப்பிரமணியன் ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு நிலஅபகரி்ப்பு வழக்குப்பதிவு செய்தனர்.