உ.பி.யில் கடந்த 2017 முதல் நில மாபியா கும்பல்களிடம் இருந்து 64 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இது தொடர்பாக அரசு விழா ஒன்றில் அவர் நேற்று பேசியதாவது: உ.பி.யில் 2017-ம் ஆண்டுக்கு முன் நில உரிமை மாற்றம், எல்லை நிர்ணயம், பயன்பாட்டு உரிமைகள் உள்ளிவை தொடர்பாக 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தீர்க்கப்படாத தகராறுகள் இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகளை தீர்ப்பதற்கு சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் முதல் தாசில்தார் மற்றும் வருவாய் அதிகாரிகள் வரை அனைத்து நிர்வாக மட்டத்திலும் கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்து, பொறுப்புணர்வை உறுதி செய்தோம். இதன் மூலம் அனைத்து நிலுவை வழக்குகளுக்கும் தீர்வு கண்டோம்.