பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா லோக் ஆயுக்தா போலீஸில் புகார் அளித்தார்.