கோவை: கோவையில் செயல்பட்டு வந்த தனியார் ஐடி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 3,000 தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
‘போக்கஸ் எஜூமேட்டிக் பிரைவேட்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 2017-ம் ஆண்டு முதல், கோவை ஆர்.எஸ்.புரம் – தடாகம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வந்தனர். இப்பணியாளர்கள், அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இணைய வாயிலாக பாடம் கற்பித்து வந்துள்ளனர்.