நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கக் கூடாது. அவர்கள் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்திவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி.” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அணுசக்தியை அதிகரிக்க ஓவல் அலுவலகத்தில் பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது பேசிய ட்ரம்ப், “டிம் குக் இதைச் செய்ய மாட்டார் என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அவர் ஆலைகளை உருவாக்க இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறினார். நான் சொன்னேன், இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி. நாங்கள் ஐபோன் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் அதை அமெரிக்காவில் விற்கப் போகிறார்கள் என்றால், அதை அமெரிக்காவில் தயாரிக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.