சென்னை: “தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பொய் பேசி வாக்கு பெற்ற திமுக கட்சிக்கு, பொதுமக்கள் மரண அடி கொடுப்பார்கள்.” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 4) சட்டம் – ஒழுங்கு குறித்து பேச அதிமுகவினர் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம் – ஒழுங்கு குறித்து பேச அனுமதி அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.